நான் மீண்டும் பிறவாவிட்டால் மகிமையின் வாசல் நமக்கு அடைக்கப்பட்டிருக்கும் என்று இயேசு சொல்கிறார். எனவேதான் நாங்கள் வினவுகிறோம். நண்பரே, நீர் மீண்டும் பிறந்தீரா? இல்லையென்றால் நீர் இழந்துபோகப்பட்டவரே, ஏனெனில் இயேசுவே” ஒருவன் மறுபடியும் பிரவாவிட்டால் தேவனுடைய இராஜ்ஜியத்தைக் காணமாட்டேன்” என்றார். யோவா 3:3 உண்மையாகவே யாரும் பாவியாக இறந்து போகவோ, அழிந்து போகவோ விரும்பமாட்டான். எனவே நீர் மறுபடியும் பிறக்க வேண்டும்.
மீண்டும் பிறத்தல் என்றால் என்ன என்று நீங்கள் கேட்கலாம். முதலாவது இது என்ன அல்ல என்று பார்ப்போம். இது ஞானஸ்நானம் அல்ல, சிலர் ஞானஸ்நானம் பெற்றார்கள். ஆனாலும் மறுபடியும் பிறக்கவில்லை.(அப், 8:18-25) அது சபையில் சேர்ந்துகொள்ளுதல் கிடையாது. ஏனெனில் சிலர் பக்கவழியாய் சபையில் நுழைகிறார்கள்.(கலா,2:4) அது கர்த்தருடைய பந்தியில் சாப்பிடுவதுமில்லை. ஏனெனில் சிலர் அபாத்திரமாய்ப் போஜன பானம் பண்ணி ஆக்கினைத்தீர்ப்பை வருவித்துக் கொண்டார்கள்.(1 கொரி.11:29) அது சீர்திருத்தலோ, நன்றாக வாழ முயற்சிப்பதோ அல்ல,” அநேகர் உட்பிரவேசிக்க வகை தேடினாலும் அவர்களால் கூடாமற்போகும்” லூக்13:24, அது ஜெபிப்பது அல்ல. ஏனெனில் இயேசு சொல்கிறார்.” இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து தங்கள் உதடுகளினால் என்னைக் கனம் பண்ணுகிறார்கள்: அவர்கள் இருதயமோ எனக்கு தூரமாய் விலகியிருக்கிறது” மத்15:8
மேலும் சிலர் சொல்லலாம் “என்னால் முடிந்த யாவற்றையும் செய்ய முயல்வேன்; ஏழைகளுக்கு ஈந்து, நோயாளிகளை சந்தித்து, என்னால் முடிந்த எல்லா நன்மைகளையும் ஒவ்வொரு நாளும் செய்தால் நான் உண்மையாகவே மீண்டும் பிறந்தவன்” என்று இல்லை, நாம் உண்மையாகவே வேறொருவராக முடியாது. எப்படியென்றால் மாம்ச சிந்தை தேவனுக்கு விரோமான பகை; அது தேவனுடைய நியாயப் பிரமாணத்துக்கு கீழ் படியாமலும், கீழ்படியக்கூடாமலும் இருக்கிறது. ரோமர் 8.7 நமக்கு ஒரு இருதய மாற்றம் வேண்டும். தீர்க்கதரிசியின் மூலம் தேவன் சொல்கிறார். உங்களுக்கு நவமான இருதயத்தை கொடுத்து உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியை கட்டளையிட்டு கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்து போட்டு சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன். ஏசேக். 36:26.
சரி, அப்படியானால் புதுப்பிறப்பு என்பதுதான் என்ன என்று நாம் வினவலாம்? ஏன் அதை பிறப்பு என்னும் சொல் கொண்டு அழைக்கிறோம்? எப்படி எப்போது அடைகிறோம்? மாம் சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், என்று இயேசு சொல்கிறார். யோவா 3:6. ஒத்ததையே ஒத்தது பிறக்கும் குழந்தை பிறக்கும் போது இதுவரை இல்லாத ஒன்றை பிறக்கிறது. ஒரு புது வாழ்வு ஆரம்பிக்கிறது. ஒரு புது ஆள் மாம்சப்பிரகாரமானவன். ஆகையால் அது போன்றே நாம் மறுபடியும் பிறக்கும்போது கிறிஸ்து இயேசுவில் ஆவியில் புது வாழ்வு ஆரம்பிக்கிறது. இதற்கு முன்பு இராதது. இந்த வகையை ஒப்புநோக்கும்போது, இயற்கையான பிறப்புபோன்றிருப்பதால் இது பிறப்பு என்று கூறப்படுகின்றது. கிறிஸ்து இயேசுவில் நித்தியமான ஒரு புதுவாழ்வு, ஏனெனில் உயிரோடிருந்து விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மறியாமலும் இருப்பான். யோவா 11:26 இவைகள் எப்படி ஆகும் என்று நிக்கொதேமுவுடன் நாமும் விளித்து வினவுகிறேமல்லவா? யோவா 3:9.
மனிதனால் அது கூடாது தான், ஆனால் தேவனால் எல்லாம் கூடும் என்று இயேசு தெளிவுபடுத்தியதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இழந்த நிலையில் பாரத்தோடு, இழிய, பாவியாக, மாம்ச நோக்கத்தோடு, இருதய சமாதானமில்லாமல், ஓய்வையும் சமாதானத்தையும் ஆசிக்கிரவர்களாக நமது துயரத்தில் ”இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்” என்று சிறைச்சாலைக்காரனோடு விளிக்கின்றவர்கள் தேவனிடத்திற்கு வருவோமேயானால், “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி”என்று சொன்னார். இந்த மனிதன் தனது கடைசி எல்லையில் இருந்தான் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அவனுடைய வீனா ” இரட்சிக்கப்படுவதற்கு நான் எதையும் செய்யத்தயார்” என்பது போல் தோன்றுகிறது. இது தான் முழுமையான சரண், இருதயத்தை காண்கின்ற தேவன், நீர் ஆண்டரே! ஆண்டவரே! என்று கூறியும், அவர் சொல்வதைச் செய்யாதவராக அல்ல, முழுவதும் கீழ்படிந்து அவருக்காக வாழ்வாய் என்பதை அவர் காண்கிறார். தேவன் பரிசுத்த ஆவியின்(சங் 51:10) வல்லமையோடு உம்மிடம் வந்து உம்மிலே சரியான ஆவியின் நிலையைக் கொண்டுவருவார். இவ்வாறாக நீர் மறுபடியும் கிறிஸ்து இயேசுவில் அவரை விசுவாசிப்பதின் மூலம் ஒரு புதுசிருஷ்டியாக பிறக்கின்றீர்(11 கொரி 5:7)
ஆனால் நான் எப்பொழுது மறுபடியும் பிறக்க எதிர்பார்க்கலாம்? பரிசுத்த ஆவியின் மூலம் தேவன் சொல்கிறார்;” இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்கள்” என்று(எபி 3:7) எந்த வயதிலும், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் அழைப்பு வருவதை நாம் கேட்போம் என்பதே அதன் பொருள். தேவனுடைய பிள்ளைகளும், தேவனுடைய சுதந்தரருமாக கிறிஸ்துவுடனே உடன் சுதந்தரரும் ஆக நாம் வந்து, ஆவியின் மூலம் மறுபடியும் பிறப்போமாக. ரோமா (8:14-17).
ஆனால் அதற்கு எவ்வளவு நாளாகும், புதுப்பிறப்பிற்க்கு நான் வளர வேண்டாமா? இல்லை, இல்லை, அன்புள்ள வாசகரே. நாம் தேவனுடைய அரசில் பிறக்கிறோம். அதுவே நம்மைப்புத்திரரும், சுதந்தரரும் ஆக்குகின்றது. இயேசுவினிடம் கிருபைக்காகவும், மன்னிப்புக்காகவும் வரும் அந்தக் கணத்திலேயே அது நடைபெறுகின்றது.
கடைசியாக நான் மறுபடியும் பிறந்ததை எங்கனம் அறிவேன்? நீங்கள் விசுவாசமுள்ளவர் களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள் இயேசுக்கிறிஸ்து உங்களுள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறிவீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாகவர்களாயிருந்தால் அறிவீர்கள் என்று பவுல் II கொரிந்தியர் 13:5-ல் போதிக்கிறார். எனவே மறுபடியும் பிறவாதவர்களைப் பரீட்சிக்கும் போது அவர்கள் பாவத்தில் செத்து, இழந்து போனவர்களாக, நியாயந்தீர்க்கப்பட்டவர்களாக,தீயமனச்சான்றுடையவர்களாக,மாம்சநோக்குடையவர்களாக,நம்பிக்கை இல்லாமல்,கீழ்ப்படியாதவர்களாக இந்த உலகில் தேவனில்லாதவர்களாக, சாத்தானின் பிள்ளைகளாக இருப்பர். என்று திருமறை போதிக்கின்றது. மாறாக மறுபடியும் பிறந்த கிறிஸ்தவன் தேவனின் பிள்ளை, கிறிஸ்துவில் உயிருள்ளவன்,இரட்சிக்கப்பட்டவன்.தண்டனை இல்லாதவன், விசுவாசமும், நித்திய வாழ்வைப் பற்றிய நம்பிக்கையுமுள்ளவன். அவர்களுடைய பாவங்கள் அழிக்கப்பட்டு இயேசுவின் ரத்தத்தினால் சுத்திகரிக்கப்பட்டவர்கள் நினைவுக்கெட்டாத சமாதானமும், அன்பும் நிறைந்தவர்கள் அவர்கள். அவர்கள் கர்த்தருடைய சித்தத்தை ஆசித்து, விரும்பி அதைச்செய்யச்சக்தியும் உள்ளவர்கள். அவர்களுக்கு சவக்குழிக்கு அப்பாலும் ஒரு நம்பிக்கையை போற்றுபவர்கள். நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து, உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்வேன். யோவா 14:3 என்ற வாக்குத்தத்தத்தைப் பெற்றவர்கள். ஆகையினால் இத்தகைய மாற்றத்தினூடே சென்ற அத்தகையவர்கள். அதை அறியாமல் இருக்க முடியுமா என்று நாம் கேட்கின்றோம்?அறியாமல் இருக்க முடியாது. ஏனெனில் நாம் தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறோமென்று ஆவியானவர் தாமே நம்முடைய ஆவியுடனே கூடச் சாட்சி கொடுக்கிறார். ரோமா 8:19.
அன்புடைய வாசகரே,இந்த அனுபவத்தையும், ஆத்துமாவில் இவ்வாழ்க்கையையும், நீங்கள் போற்றுபவராக இல்லாவிட்டால் ஏனோதானோவென்று இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் தேவனையும், உங்கள் ஆத்மாவையும் அலட்சியப்படுத்துகிறீர்கள். நீர் மீண்டும் பிறக்க வேண்டும்.