தேடல் குறியீட்டை ஏற்றுகிறது…
சமீபத்திய தேடல்கள் இல்லை
முடிவுகள் இல்லை க்கான "Query here"
மூலம் தேடுங்கள் FlexSearch
சர்வ சிருஷ்டிக்கும் மேலான உன்னதமான ஒரு ஜீவனையே நாம் கடவுள் என்று அழைக்கிறோம் என்பது தெளிவான உண்மை. அவரே காணப்படுகிறவைகளும், காணப்படாதவைகளும் ஆகிய சகலத்தையும் படைத்தவர். (கொலோ 1:16) எழுதப்பட்ட அவருடைய வார்த்தை அதைக் குறித்து பின்வருமாறு கூறுகிறது. வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது. ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. பகலுக்குப்பகல் வார்த்தைகளைப் பொழிகிறது. இரவுக்கு இரவு அறிவைத்தெரிவிக்கிறது. அவைகளுக்குப்பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசி வரைக்கும் செல்லுகிறது. அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார்.(சங்19:1-4) இந்த கடவுள் சிருஷ்டிக்கப்பட்டவரோ அல்லது மனிதனால் உண்டாக்கப்பட்டவரோ அல்ல. அவர் நித்தியவாசி. பர்வதங்கள் தோன்றும் முன்னும் நீர் பூமியையும், உலகத்தையும் உருவாக்கும் முன்னும் நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனா இருக்கிறீர்.(சங்.90:2) அவரே ஆதியும் அந்தமுமானவர்.(வெளி.1:8)