இவ்வுலகில் ஒருகாலத்தில் எதுவுமே
இருந்ததில்லை மீன்கள் இல்லை
வான் வெளியில் நட்சத்திரங்கள் இல்லை,
கடல்களோ அழகிய மலர்களோ இல்லை,
எல்லாம் வெட்ட வெளியாகவும் இருள்சூழ்ந்தும் இருந்தது,
ஆனால் தேவன் இருந்தார் :நாம் இன்று ஜெபிக்கும் அதே தேவன்தான்.
தேவனுக்கு ஒரு மேம்பாடான திட்டம் இருந்தது. அவர் ஒரு அழகிய உலகத்தைப் பற்றிச்சிந்தித்தார், அவர் சிந்திக்கும் போது அவர் உண்டாக்கவும் செய்தார். அவர் எல்லாவற்றையும் ஒன்றுமில்லாமையிலிருந்து உண்டாக்கினார். தேவன் எதையும் உண்டாக்கும் போது, அவர் “அது உண்டாகக் கடவது” என்பார்.அது உண்டாகி இருக்கும்!
அவர் வெளிச்சத்தை உண்டாக்கினார். அவர் ஆறுகளையும், கடல்களையும், புல் மூடிய பூமி, விலங்குகள் பறவைகள், மரங்களையும் உண்டாக்கினார்.
எல்லாவற்றிருக்கும் கடைசியாக அவர் மனிதனை உண்டாக்கினார், பிறகு அந்த மனிதனுக்கு ஒரு மனைவியையும் உண்டாக்கினார். அவர் அவர்களுக்குப் பெயர்களும் கூடக்கொடுத்தார்- ஆதாம், ஏவாள்
அவர் அவர்களை மிகவும் நேசித்தார். அவர்கள் வசித்த அழகிய தோட்டத்தில் ஒவ்வொரு மாலையிலும் அவர்களைப் போய்ச்சந்தித்தார்.
ஒரே ஒரு மரத்தைத் தவிர, அந்த முழு தோட்டத்தையும் அவர்கள் அனுபவிக்கலாம். அது ஒன்று மட்டுமே தேவன் விலக்கிய மரம்.
தேவனின் பகைவனாகிய சாத்தான், ஒரு நாள் அவர்களைச் சோதிக்கும் வரையிலும் ஆதாமும், ஏவாளும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தார்கள். சாத்தானின் தூண்டுதலின் பேரில் தேவன் விலக்கிய மரத்தின் கனியை ருசித்துப் பார்க்கக் கடைசியாக அவர்கள் தீர்மானித்தார்கள். அவர்கள் பாவம் செய்தார்கள். முதல் முதலாக அவர்கள் வெட்கமும், கவலையும் அடைந்தார்கள்.
தேவனோடு பேச அவர்களுக்கு கூடாமற்போயிற்று. இப்போதும் வழியும் துன்பமும் அவர்களுக்கு வந்தது. அவர்கள் மரணம் அடையும் வாய்ப்புண்டாயிற்று. அவர்கள் எவ்வளவாக வருந்தினார்கள்!
பிறகு தேவன் அவர்களுக்கு உதவி செய்ய வாக்குக்கொடுத்தார். “தகுந்த காலம் வரும்போது, என்னுடைய குமாரன் இயேசுவை இந்த உலகத்திற்கு அனுப்புவேன். எங்களுடைய மோட்ச வீட்டிலிருந்து தாழ வருவார். அவர் உங்கள் பாவங்களை நீக்குவார். இதைச் செய்வதற்காக அவர் பாடுபட்டு உங்களுக்காக மரிப்பார்” என்று அவர்களுக்கு தேவன் சொன்னார். ஒரு மீட்பரை அவர்களுக்கு தேவன் அனுப்புவார் என்று அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
ஆதாமுக்கும், ஏவாளுக்கும் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் பிறந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக உலகத்தில் பல மக்களும் நிறைந்தார்கள்.
தேவன் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று விரும்பினார். அவர்கள் என்ன செய்யவேண்டும் என்று அவர்களுக்குச் சொன்னார். தேவன் அவர்களுக்குக்கொடுத்த சட்டங்களின் பட்டியல் இங்கே உள்ளது. ( யாத்திராகமம்20:3-17)
1.என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்
2.நீ ஜெயிப்பதற்காக யாதொரு விக்கிரகத்தை உண்டாக்க வேண்டாம்
3.நீ தேவனாகிய கர்த்தரின் நாமத்தை வீணிலே வழங்கவேண்டாம்
4.ஓய்வு நாளைப் பரிசுத்தமாக ஆசரிப்பாயாக
5.உன் தகப்பனையும், தாயையும் கனம் பண்ணுவாயாக
6.நீ யாரையும் கொலை செய்யாதிருப்பாயாக
7.நீ விபச்சாரம் செய்யாமலிருப்பாயாக
8.நீ களவு செய்யாதிருப்பாயாக
9.நீ பொய் சொல்லாதிருப்பாயாக
10. பிறனுக்குச் சொந்தமானதை எடுத்துக்கொள்ள இச்சியாதிருப்பாயாக.
நாமும் அவைகளை வாசித்துக் கொள்வதற்காக அவைகள் வேதப்புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அவைகளுக்கு கீழ்ப்படிந்திருந்தால், நாம் மகிழ்ச்சியாக இருப்போம்.
நாம் அவைகளுக்குக் கீழ்படியச் சாத்தான் விரும்பவில்லை. மற்றவர்கள் பார்க்காமல் இருக்கும் போது எதையும் திருடிக்கொள்ள அவன் சொல்கிறான். ஆனால் தேவனுக்கு அது தெரியும். தேவன் எல்லாவற்றையும் பார்க்கிறார்.
சில சமயங்களில் சாத்தான் நாம் ஒரு பொய் சொல்லும்படி சோதிக்கிறான். அதை யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று நினைத்துக் கொள்ளச் செய்கிறான். தேவனுக்கு அது தெரியும். அவர் எல்லாவற்றையும் கேட்கிறார்.
இவைகளை நாம் செய்யும் போது, உள்ளத்தில் கேடு உள்ளதை உணர்கிறோம். தேவன் நம்மை நேசிக்கிறார். நாம் நன்மை செய்ய வேண்டும் என்று நமக்கு உதவி செய்ய அவர் விரும்புகிறார். அதனால் தான் தேவன் இவ்வுலகத்திற்கு இயேசுவைக் கொடுத்தார். தேவன் தம்முடைய வாக்கை நினைத்தார்.
பல ஆண்டுகளுக்கு பிறகு இயேசு ஒரு சிறு குழந்தையாகப் பிறந்தார். அவர் வளர்ந்து ஒரு மனிதன் ஆனார்.
அவர் அநேக வியப்பான காரியங்களெல்லாம் செய்தார். நோயுற்றவர்களை குணமாக்கினார். குருடரைப் பார்க்கச் செய்தார். சிறுவர்களை ஆசிர்வதித்தார்.
இயேசு எந்தத்தவறும் செய்யவே இல்லை. தேவனைப்பற்றியும் அவருக்கு எப்படிக் கீழ்படிய வேண்டும் என்றும் இயேசு மக்களுக்குச் சொன்னார்.
இயேசுவின் விரோதிகள் கொஞ்ச காலத்திற்குப் பிறகு, அவரை ஒரு சிலுவையில் ஆணியினால் அறைந்தார்கள். அவர் இறந்தார்.
எல்லாம் மக்களின் பாவங்களுக்காகவும் அவரைச் சிலுவையில் அறைந்தவர்களுக்காகவும் கூட, அவர் பாடுபட்டு மரித்தார்.
இயேசு அடக்கம் பண்ணப்பட்டார். ஆனால் பிறகு ஒரு வியப்பான காரியம் நடந்தது. அவர் சவக்குழியில் அடங்கியிருக்கவில்லை.அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார்.
உடனே தேவன் அவரை ஒரு மேகத்தில் இருத்தி வானத்திற்கு அழைத்துக்கொண்டார். அவருடைய நண்பர்கள் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு தேவ தூதன் இயேசு திரும்பவும் வருவார் என்று அவர்களுக்கு சொன்னான்.
இயேசு நம்முடைய பாவங்களுக்காகவும் மரித்தார். நம்முடைய பாவங்களுக்காக நாம் மனஸ்தாபப்பட வேண்டும். அறிக்கை செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நம்மை மன்னிக்க அவர் தயாராக இருக்கிறார்.(1 யோவான்1.9)
நாம் எந்த நேரத்திலும் தேவனிடம் ஜெபிக்கலாம். நம் ஒவ்வொரு வார்த்தையும் அவர் கேட்கிறார். நம் ஒவ்வொரு எண்ணத்தையும் அவர் அறிகிறார். நம்முடைய பாவம் மன்னிக்கப்படும்போது நமக்கு உள்ளாக நாம் மகிழ்ச்சியை உணர அவர் செய்கிறார். பிறகு சரியான காரியங்களையே செய்ய நாம் விரும்புவோம். நாம் அன்பாகவே இருக்கவும் விரும்புவோம்.
ஆனால் தேவனுக்கு கீழ்ப்படியாமல் சாத்தானைப் பின்பற்றி போவோமானால், தேவன் நாம் இறந்த பிறகு நம்மை நரத்திற்கு அனுப்புவார். நரகத்தில் நெருப்பு எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும்.
நாம் இயேசுவில் அன்பு கூர்ந்து அவருக்கு நாம் கீழ்ப்படிந்தால், அவர் திரும்ப வரும்போது நம்மையும் சொர்க்கத்திற்கு எடுத்துச் செல்வார். சொர்க்கமானது அன்பும் ஒளியும் நிறைந்த தேவனின் இல்லம்.
அங்கே, எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருப்போம்.
இயேசு என்னை நேசிக்கிறார்! இது எனக்கு தெரியும்
1.இயேசு எந்தன் நேசரே, கண்டேன் வேத நூலிலே
பாலர் அவர் சொந்தம் தான், தாங்க அவர் வல்லோர்தான்
பல்லவி.
இயேசு என் நேசர், இயேசு என் நேசர்
இயேசு என் நேசர், மெய் வேத வாக்கிதே.
2.என்னை மீட்க மரித்தார், மோட்ச வாசல் திறந்தார்:
எந்தன் பாவம் நீக்குவார், பாலன் என்னை இரட்சிப்பார்.
3.நான் நன்மையே செய்கையில் என்னை நேசிக்கிறார்,
என் தீமையிலும் நேசிக்கிறார், மிகவும் வருந்தியே.
4.பெலவீனம் நோவிலும், என்றும் என்னை நேசிக்கும்
இயேசு தாங்கித்தேற்றுவார்; பாதுகாக்க வருவார்.
5.எந்தன் மீட்பர் இயேசுவே தாங்குவார் என்னருகே;
நேசனாய் நான் மரித்தால் மோட்சம் சேர்ப்பார் அன்பினால்.