இயேசுவானவர் ” மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் ; ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என தீர்க்கப்படுவாய் அல்லது குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய்” மத்தேயு 12:36-37 என்று சொன்னபோது, ஜனங்கள் தங்கள் கிரியைகளுக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு நினைப்பூacட்டினார். தங்கல் கிரியைகளுக்கு அவர்கள் விளக்கங்கூறி அவைகளுக்கு அவர்கள் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பது தான் அதின் கருத்து.
கர்த்தர் எவ்விதமாக கணக்கு வைக்கிறார் என்பதை பரிசுத்த வேதாகமம் வெளிப்படுத்துகிறதில்லை. ஆனால் அது மிகவும் சரியான பதிவேடாகவும் மாற்றக் கூடாததாகவும் இருக்கும். “மரித்தோராகிய சிறியோரையும் பெரியாரையும் தேவனுக்கு முன் நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன. ஜீவ புஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது. அந்த புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள், தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்”.
“ஜீவ புஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்னிக் கடலிலே தள்ளப்பட்டான். வெளி :20.12.15.
கடவுள் பெரியவரும் சர்வ ஞானமுள்ள சர்வ வல்லமையுள்ளவரும், சர்வ வியாபியாவருமாயிருக்கிறார். தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும் இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கனதாயும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக்குத்துகிறதாயும் இருதியத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது; அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். எபி 4:12-13.
கர்த்தர் நினைவுகளையும் யோசனைகளையும் கூட அவ்வளவு நுணுக்கமாக நியாயந்தீர்க்க போகிறாரென்றால், உண்மையாகவே அவர் மனிதனுடைய லேசான சிந்தனைகள், கேலி பேசுதல் முட்டாள்தனமான பேச்சுக்கள், தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்குதல், சபித்தல், ஆணையிடுதல் மாய்மாலம் நிர்விசாரம், கோபம், விரோதம், தூஷணம்பேசுதல், களியாட்டு, குடிப்பழக்கம், வேசித்தனம், விபச்சாரம், திருடு, கொலை, விக்கிரகாராதனை பில்லி சூனியம், தற்புகழ்ச்சி, அசுத்த காமம், கடுங்கோபம், போராட்டம், தேச துரோகம், அவிசுவாசம், பொறாமை, பெற்றோருக்கு கீழ்படியாமை, சுயநலம், பரிசுத்தமின்மை, அசுத்தமான பொருளாசை, பிறர் பொருள் இச்சித்தல், தற்பெருமை, பெருமை, தேவதூஷணம், நன்றி இல்லாமை, இயற்கைக்கு விரோதமான அன்பு, சமாதானத்தை மீறுதல், பொய்க் குற்றச்சாட்டுகள், கற்பை காக்காமல் இருத்தல், நல்லவர்களை தாழ்வாக நினைப்பது, மூர்க்கத்தனம், காட்டிக்கொடுத்தல், மண்டைக் கர்வம், மேம்பாடான எண்ணம், கடவுளை விட சிற்றன்பங்களை நேசித்தல், கடவுளுடைய வல்லமையை நிராகரித்தல், கிறிஸ்துவின் திரு இரத்தத்தை அசுத்தமாக நினைத்தால், மந்திரத்தில் நம்பிக்கை பொய்யை உண்டாக்கி அதை நேசித்தல், முதலியவைகளை அவர் விட்டு வைக்க மாட்டார்(கலாத்:5:19-21,2 தீமோ: 3.2-5)
ஏனென்றால் சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது, தீமைக்காவது தக்க பலனை அடையும் படிக்கு நாமெல்லாரும், கிறிஸ்துவின் நியாயசனத்திற்கு முன்பாக வெளிப்பட வேண்டும்(2 கோரிந்5:10)
“நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால் பத்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான். (1 பேதுரு 4:18) அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி எனக்கு விரோதமாய் பாவஞ் செய்தவன் எவனோ அவன் பெயரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்குப் போடுவேன்” யாத் 32.33 நமது எண்ணங்களை கர்த்தல் தூரத்திலிருந்து அறிகிறார். நாம் அவர் முன் திறந்து வைக்கப்பட்ட புஸ்தகம் போல் இருக்கிறோம். நான் செய்த எல்லாவற்றையும் இயேசு சொன்னார்; அவரை வந்து பாருங்கள்(யோவான்4.29).
ஜீவ புத்தகத்தில் ஒருவனுடைய பெயர் எழுதப்படவேண்டுமென்றால் நாம் இயேசுவினுடைய அழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். ” வருத்தப்பட்டு பாரஞ் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” மத்11.28 எல்லாரும் கடவுளுக்கு முன்பாக ஏதாவது பாவஞ் செய்திருக்கிறார்கள் ரோமர் 5:12 எல்லா மனிதருக்கும் ஒரு இரட்சகர் தேவை. “இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக, ஒருவன் மறுபடியும் பிறவா விட்டால் தேவனுடைய இராஜ்ஜீயத்தைக் காண மாட்டான்”. யோவான் 3.3. நீங்கள் மனந்திரும்பி பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் பரலோக இராஜ்ஜீயத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள்” மத் 18.3 இயேசு ஒவ்வொரு வரையும் தன்னுடைய பாவத்தினின்று இரட்சிக்கப் பட, தன்னிடம் அழைக்கிறார். அவர் யாரை மன்னிகிறாரோ அவனை தன்னுடைய பிள்ளையாக ஏற்றுக் கொள்கிறார். பிள்ளை (குமாரன்) என்றால் தேவனுடைய சுதந்திரவாளியாகிறான்.
ஜீவ புத்தகத்தில் நமது பெயர்களை பத்திரப் படுத்துவதற்கு “இதோ சீக்கிரமாய் வருகிறேன். ஒருவனும் தன் கிரீடத்தை எடுத்துக் கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதை பற்றிக் கொண்டிரு”(வெளி3:11) என்று ஆண்டவர் சொல்கிறார். மத்26:41 ல் நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான். மாம்சமோ பலவீனமுள்ளது “என்று இயேசு சொல்கிறார் அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்திய விசுவாசிகளுக்கு 1கொரிந்த் 16:13 ல் “விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன் கொள்ளுங்கள்” என்று சொல்கிறார். கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு அப்போஸ்தலனாகிய பேதுரு 1 பேதுரு 4:7 ல் " எல்லாவற்றிருக்கும் முடிவு சமீபமாயிருக்கிறது.
ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து” ஜெபம் பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள் என்று சொல்லுகிறார். அப்படியே 5ம் அதிகாரம் 8,9 வசனங்களில் ” தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள் விழித்திருங்கள். ஏனெனில் உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்கலாமோ என்று வகை தேடிச்சுற்றித் திரிகிறான்” விசுவாசத்தில் உறுதியாயிருந்து அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்” ஜெயங் கொள்ளுகிறவள் எவனோ அவனுக்கு வெண் வஸ்திரம் தரிக்கப்படும். ஜீவ புஸ்தகத்தில் இருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப் போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும், அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்” வெளி 3:5. நம்மை செம்மைப்படுத்தி நியாயத்தீர்ப்பு நாளில் கணக்கொப்புவிக்க நம்மை ஆயத்தம் செய்து கொள்ள இது கிருபையின் காலமாக இருக்கிறது. இந்த சாவுக்கேதுவான சரிரம் சீக்கிரம் மண்ணுக்குத் திரும்பும், அல்லது அவர் வருகையில் நாம் அவரைச் சந்தித்தோமானால், சத்திய வேதம் சொல்லுகிறபடி நம்முடைய உடல் அழியாததாக மாறும்.
எவ்வளவு ஜாக்கிறதையாக நாம் நம்முடைய எண்ணங்களையும் வார்த்தைகளையும் கிரியைகளையும் காப்பாற்ற வேண்டும். “இதோ இரட்சிக்க கூடாத படிக்கு கர்த்தருடைய கை குறுகி போகவும் இல்லை; கேட்க கூடாத படிக்கு அவருடைய செவி மந்தமாகவும் இல்லை” ஏசா 59:1. அப்பெரிய முக்கியமான நாளன்று நாம் வெண் வஸ்திரம் தரித்தவர்களாய், அந்த மகிமையான மோட்சத்தில் பிரவேசிக்க, நம்முடைய இருதயத்தில் ஏதாவது குறை இருந்தால் அது கழுவப்பட (மன்னிக்கப்பட) நான் இயேசுவினிடத்தில் போவோமாக “தீட்டுள்ளதும் அருவருப்பையும், பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்” வெளி 21:27.