இயேசு

சர்வ சிருஷ்டிக்கும் மேலான உன்னதமான ஒரு ஜீவனையே நாம் கடவுள் என்று அழைக்கிறோம் என்பது தெளிவான உண்மை. அவரே காணப்படுகிறவைகளும், காணப்படாதவைகளும் ஆகிய சகலத்தையும் படைத்தவர். (கொலோ 1:16) எழுதப்பட்ட அவருடைய வார்த்தை அதைக் குறித்து பின்வருமாறு கூறுகிறது. வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது. ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. பகலுக்குப்பகல் வார்த்தைகளைப் பொழிகிறது. இரவுக்கு இரவு அறிவைத்தெரிவிக்கிறது. அவைகளுக்குப்பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசி வரைக்கும் செல்லுகிறது. அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார்.(சங்19:1-4) இந்த கடவுள் சிருஷ்டிக்கப்பட்டவரோ அல்லது மனிதனால் உண்டாக்கப்பட்டவரோ அல்ல. அவர் நித்தியவாசி. பர்வதங்கள் தோன்றும் முன்னும் நீர் பூமியையும், உலகத்தையும் உருவாக்கும் முன்னும் நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனா இருக்கிறீர்.(சங்.90:2) அவரே ஆதியும் அந்தமுமானவர்.(வெளி.1:8)

இவ்வுலகில் ஒருகாலத்தில் எதுவுமே இருந்ததில்லை மீன்கள் இல்லை வான் வெளியில் நட்சத்திரங்கள் இல்லை, கடல்களோ அழகிய மலர்களோ இல்லை, எல்லாம் வெட்ட வெளியாகவும் இருள்சூழ்ந்தும் இருந்தது, ஆனால் தேவன் இருந்தார் :நாம் இன்று ஜெபிக்கும் அதே தேவன்தான். தேவனுக்கு ஒரு மேம்பாடான திட்டம் இருந்தது. அவர் ஒரு அழகிய உலகத்தைப் பற்றிச்சிந்தித்தார், அவர் சிந்திக்கும் போது அவர் உண்டாக்கவும் செய்தார். அவர் எல்லாவற்றையும் ஒன்றுமில்லாமையிலிருந்து உண்டாக்கினார். தேவன் எதையும் உண்டாக்கும் போது, அவர் “அது உண்டாகக் கடவது” என்பார்.அது உண்டாகி இருக்கும்! அவர் வெளிச்சத்தை உண்டாக்கினார். அவர் ஆறுகளையும், கடல்களையும், புல் மூடிய பூமி, விலங்குகள் பறவைகள், மரங்களையும் உண்டாக்கினார். எல்லாவற்றிருக்கும் கடைசியாக அவர் மனிதனை உண்டாக்கினார், பிறகு அந்த மனிதனுக்கு ஒரு மனைவியையும் உண்டாக்கினார். அவர் அவர்களுக்குப் பெயர்களும் கூடக்கொடுத்தார்- ஆதாம், ஏவாள் அவர் அவர்களை மிகவும் நேசித்தார். அவர்கள் வசித்த அழகிய தோட்டத்தில் ஒவ்வொரு மாலையிலும் அவர்களைப் போய்ச்சந்தித்தார்.

இயேசு 3 minutes