சர்வ சிருஷ்டிக்கும் மேலான உன்னதமான ஒரு ஜீவனையே நாம் கடவுள் என்று அழைக்கிறோம் என்பது தெளிவான உண்மை. அவரே காணப்படுகிறவைகளும், காணப்படாதவைகளும் ஆகிய சகலத்தையும் படைத்தவர். (கொலோ 1:16) எழுதப்பட்ட அவருடைய வார்த்தை அதைக் குறித்து பின்வருமாறு கூறுகிறது. வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது. ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. பகலுக்குப்பகல் வார்த்தைகளைப் பொழிகிறது. இரவுக்கு இரவு அறிவைத்தெரிவிக்கிறது. அவைகளுக்குப்பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசி வரைக்கும் செல்லுகிறது. அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார்.(சங்19:1-4)
இந்த கடவுள் சிருஷ்டிக்கப்பட்டவரோ அல்லது மனிதனால் உண்டாக்கப்பட்டவரோ அல்ல. அவர் நித்தியவாசி. பர்வதங்கள் தோன்றும் முன்னும் நீர் பூமியையும், உலகத்தையும் உருவாக்கும் முன்னும் நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனா இருக்கிறீர்.(சங்.90:2) அவரே ஆதியும் அந்தமுமானவர்.(வெளி.1:8)
இந்த முடிவில்லா ஜீவனானவர் எல்லை இல்லாதவர். அவருடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாக நிற்கும்(தானி.4:3) சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கி வைக்கிற மனுஷருடைய எல்லாவித அவ பக்திக்கும் அநியாய்த்துக்கும் விரோதமாய் தேவ கோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது. தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தி இருக்கிறார்.
எப்படியென்றால் காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பனவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிற வைகளினாலே உலகம் உண்டானது முதற்கொண்டு தெளிவாய் காணப்படும். ஆதலால் அவர்கள் போக்குச் சொல்ல இடமில்லை . அவர்கள் தேவனை அறிந்தும் அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்தரியாமலும் இருந்து தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள் உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. (ரோமர்1:18-21).
தெய்வபக்தி உள்ளவர்களுக்கு ஞானமுள்ள தேவனது படைப்பில் ஒரு திட்டமும் நோக்கமும் இருப்பது நியாயமாகவும், தெளிவாகவும் தோன்றும். மகா பெரிய வான மண்டலம், இயற்கை, மனித வாழ்வு மற்றும் மனிதனுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டவைகள் ஆகியவற்றை எவ்வளவு அதிகம் அறிகிறோமோ. எவ்வளவு அதில் தெளிவு உண்டாகும்.
வான மண்டலம் தானாகவே வந்தது என நம்பவேண்டுமானால் அவைகளின் தோற்றத்தின் ஆரம்பமும், அவைகளின் ஒழுங்கு வரிசைகளும் கேள்வியை தருகிறது. வேதாகம சத்தியங்களை ஏற்றுக்கொள்கிறவர்களும், படைப்பைப்பற்றி கருத்தாக ஆராய்கிறவர்களும் கடவுள் இருப்பதற்கு ஏராளமான நிறுவனங்களை காண முடியும். சங்கீதம்14:1 ல் தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்கிறான் என்று தாவீது சொல்லுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
இந்த உன்னதமான ஜீவனானவர்
சர்வ வல்லமையுள்ள தேவன்
நான் சர்வ வல்லமையுள்ள தேவன் நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு ஆதி:17.1ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ தேவரீர் உம்முடைய மகா பலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும், வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர். உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை. எரே 32:17
கடவுள் சர்வ அதிகாரமுடையவராய் இருக்கிறார். ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் நாம் வாசிக்கிறது போல, ஆதியில் கடவுள் பேசினார்;
இந்த உலகம் உண்டானது. இன்னும் ஒருமுறை கடவுள் பேசுவார் அப்பொழுது இந்த உலகம் காணப்படாமல் போகும்(11 பே 3:10-12) சாதாரணமானவற்றையும் அசாதாரணமானவற்றையும் மிக துல்லியமாக அறிகிறார். அவர் சிறிய பொருட்கள் மூலமாகவும் பெரிய பொருட்கள் மூலமாகவும் அறியப்படுகிறார்.
கடவுள் சர்வ ஞானம் உடையவராய்
இருக்கிறார்
உலக தோற்ற முதல் தேவனுக்குத் தம்முடைய கிரியைகளெல்லாம் தெரிந்திருக்கிறது(அப்:15:18) மனுஷரின் கிரியைகளும் அப்படியே தெரிந்திருக்கிறது.அவர் அவருக்கு சொந்தமானவர்களை அறிந்தும் சொந்தமானவர்களால் அறியப்பட்டும் இருக்கிறார். தயவுசெய்து யோவான் சுவிசேஷம் பத்தாம் அதிகாரத்தை வாசித்துப் பாருங்கள்” அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது. அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.(எபி:4:13)
கடவுள் எல்லா இடங்களிலும் எப்போதும் நிறைந்திருக்கிறார் கடவுளுக்கு மறைவாக ஒன்றும் இருப்பதில்லை. தாவீது இராஜா இதை பின்வருமாறு அறிக்கை விடுகிறார்.”கர்த்தாவே நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர், என் உட்காருதலையும் என் எழுந்திருக்கு தலையும் நீர் அறிந்திருக்கிறீர். என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர் நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னை சூழ்ந்து இருக்கிறீர், என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும். என் நாவில் சொல்பிறவாததற்கு முன்னே, இதோ கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர். முன்புறத்திலும் பிற்புரத்திலும் நீர் என்னை நெருக்கி, உமது கரத்தை என்மேல் வைக்கிறீர் இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத உயரமாய் இருக்கிறது. உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்?உம்முடைய சமூகத்தை விட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் விடியற்காலத்து செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்திரங்களிலே போய் தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலது கரம் என்னைப் பிடிக்கும். இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச்சுற்றி வெளிச்சமாயிருக்கும். உமக்கு மறைவாக இருளும் அந்தகாரப்படுத்தாது; இரவும் பகலைப்போல வெளிச்சமாய் இருக்கும்; உமக்கு இருளும் வெளிச்சமும் சரி”(சங் 139:1-12)
உண்மையான தேவனா விக்கிரகங்களா?
அப்போதாலனாகிய பவுல் கொரிந்தியருக்கு பின்வருமாறு எழுதுகிறார், விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப் பற்றி, உலகத்திலேயே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம். வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு. இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும் (1கொரி:8:4,5) நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார். அவர்களுடைய விக்ரகங்கள் வெள்ளியும், பொன்னும் மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்கு கண்களிலிருந்தும் காணாது; அவைகளுக்குக் sகாதுகளிலிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது; அவைகளுக்குக் கைகள் இருந்தும் தொடாது; அவைகளுக்கு கால்கள் இருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவுமாட்டாது அவைகளைப் பண்ணுகிறபவர்களும் அவைகளை நம்புகிறவர்களும் அவைகளைப்போலவே இருக்கிறார்கள்”(சங் 115:3-8)
புறஜாதிகளான பெலிஸ்தியர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை இஸ்ரவேலரிடமிருந்து பிடித்தபோது அவர்கள் அதை தங்களுடைய விக்ரகமாகிய தகோனின் கோவிலின் வைத்தார்கள், உடன்படிக்கைப் பெட்டி கர்த்தருடைய சமூகத்தை காட்டுகிறது” மறுநாள் காலமே அவர்கள் வந்தபோது இதோ தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாக தரையிலே முகங்குப்புற விழுந்து கிடந்ததுமல்லாமல், தாகோனின் தலையும் அதன் இரண்டு கைகளும் வாசற்படியின் மேல் உடைப்பட்டு கிடந்தது. தாகோனுக்கு உடல் மாத்திரம்யிருந்தது(1 சங்:5:4)
இன்றைக்கும் கூட விக்ரகங்களுக்கு முன்பாக பணிகிற மக்கள் இருக்கிறார்கள். அவைகளில் சில உலோகங்களைக் கொண்டும் கற்களைக்கொண்டும் மனிதரால் செய்யப்பட்டவைகளே. சில சிலைகள் எளிதான முறையில் அடையாளம் காணவோ புரிந்து கொள்ளவோ முடியாது . அவை மனிதரால் மேன்மையாக எண்ணப் படுகிறவைகளாகிய விளையாட்டு, களியாட்டு, பராக்கிராமம், புகழ், சொத்து போன்றவைகள்(லுக்:16:15) நண்பரே! நீர் உண்மையான தேவனைத் தொழுது கொள்கிறீரா?
திருத்துவம்
நாம் தேவ நம்பிக்கையை பிதாவாகிய தேவன், குமாரனாகிய தேவன், பரித்தாவியாகிய தேவன் என்ன அறிக்கையிடுகிறோம். பரிசுத்த திருத்தவமாக மூவர் ஒன்றாகவும் ஒருவர் மூவராகவும் இருக்கிறதே அந்த ஐக்கியம், இயேசு, என் பிதா என்னிலும் பெரியவர் என்று சொல்லுகிறார்(யோ:14:28) அதே வேலையில் நானும் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம்(யோ10:30) என்றும் இயேசு சொல்லுகிறார். பரிசுத்த ஆவியானவர் பிதாவானிடத்திலிருந்து வருகிறவர்(யோ:11:26)-இயேசு சிஷ்யர்களுக்கு கடைசியாக அதிகாரம் கொடுத்தபோது திருத்துவத்தைப் பற்றி தெளிவாக போதிக்கிறார், நீங்கள் புறப்பட்டு போய் சகல ஜாதிகளையும் சீராக்கி பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்தானங் கொடுத்து(மத்:28:19) தேவன் ஆவியாய் இருக்கிறார்(யோ:4:24) என்று இயேசு சொல்கிறார்.
அப்போஸ்தலனாகிய பேதுரு ஆனனியாவிடம், பரிசுத்த ஆவியினிடத்தில் பொய் சொல்லும் படி சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன?(அப்:5:4) என்று கேட்டார். நீ மனிதனிடத்தில் அல்ல தேவனிடத்தில் பொய் சொன்னாய்(அப்:5:4) இது தேவனும் பரிசுத்தாவியானவரும் ஒருவரே என விளக்குகிறது.” ஆவியானவர் சத்தியமுள்ளவராகையால் ஆவியானவரே சாட்சி கொடுக்கிறார். பரலோகத்திலே சாட்சி இடுகிறவர்கள் மூவர். பிதா, வார்த்தை(குமாரன்) பரிசுத்தாவி என்பவர்களே இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்(1 sயோ:5:6,7)
மனிதன் தேவனைக் கண்டு கொள்ள முடியுமா?
தீர்க்கதரிசியாகிய எரேமியாவைக் கொண்டு கர்த்தர் சொல்லுகிறார். உங்கள் முழு இருதயத்தோடும் என்னை தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்(எரோ:29:13) மனிதன் தன் முழு இருதயத்தோடும், தேவனைத்தேட வேண்டும். அவன் சோர்ந்து போகாமல் தேவனை விசுவாசித்து, சீஷர்களைப்போல,” எங்கள் விசுவாசத்தைவர்த்திக்க பண்ணும்” என்று ஜெபித்தால், தேவன் அந்த ஜெபத்தைக் கேட்டு, அவனுக்கு பெலனையும், வெற்றியையும் கொடுத்து அவரை கண்டுகொள்ள செய்வார்.
தேவனிடம் மனிதன் விசுவாசம் வைப்பது மிகவும் தேவையானது, “தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் நம்மைத் தேடுகிறவர்களுக்கு பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்(எபி:11:16) அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம் அசைகிறோம், இருக்கிறோம்.(அப்:17:27,28)
எங்கும் உள்ள எல்லா மனிதரும் அவரை விசுவாசித்து இரட்சிக்கப்பட தேவன் விரும்புகிறார்
தேவன் அன்புள்ளவர். தமது சிறிஸ்டியாகிய எல்லா மனிதர்களிடமும் அவர் கரிசனையுடையவராய் இருக்கிறார். எல்லா மனிதரும் அவரை விசுவாசித்து மீட்கப்பட அவர்களுக்கு ஒரு தருணம் கொடுக்கிறார். மனிதன் தனது பாவ பாரத்திலிருந்து விடுதலை அடைய தக்கதாய் தேவன் இயேசுவை உலகத்தில் அனுப்பி, அவர் இரத்தம் சிந்தவும் தமது ஜீவனை மனிதருக்காக கொடுக்கவும் ஒரு தியாக பலியாகினார் எல்லா மனிதரும் பாவம் செய்தவர்களே. அவர்களுக்கு ஒரு மீட்பர் தேவை வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்(மத்:11:28) என்று இயேசு சொல்கிறார்.
தேவன் தீர்க்கதரிசியாகிய ஏசாயாவைக் கொண்டு பின்வருமாறு ஜனத்தை அழைக்கிறார்.” கர்த்தரை கண்டடையத் தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்.
அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். துன்மார்க்கன் தன் வழியையும் அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும்யிட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக் கடவன். அவர் அவன் மேல் மனதுருகுவார். நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக் கடவன். அவர் மன்னிக்கிறதற்குத்தயை பெருத்திருக்கிறார்(ஏசா:55:6,7)
இயேசு அவர்களுக்கு பிரதியுத்தரமாக அவர்(பிதா) அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார்(யோ:6:29)
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவரிசி. அப்பொழுது நீயும், உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்(அப்:16:21) வாக்குத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உடையதாயிருக்கிறது.(அப்:2:39)
அவர் உம்மை அழைக்கிறதை நீர் கேட்கிறீரா?
இதோ வாசற்படியில் நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவை(தன் இதயக் கதவை) திறந்தால் அவனிடத்தில் நான் பிரவேசித்து அவனோடே போஜனம் பண்ணுவேன்.
அவனும் என்னோட போஜனம் பண்ணுவான்(வெளி:3:20) அவர் கனிவாக உன் இருதயத்தை தட்டுவது உனக்கு கேட்கிறதா? அவர் உனது இருதயத்திற்குள் வர கெஞ்சுவது உமக்கு தெரிகிறதா?
தேவனை பற்றி அதிகம் அறியவும், இரட்சிப்பைப் பற்றியும், நீர் இரட்சிக்கப்பட்டிருக்கிறீரா என்பதைப் பற்றியும், கைப்பிரதிகள் இலவசமாக பெற்றுக்கொள்ள கீழ்க்காணும் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.