தேடல் குறியீட்டை ஏற்றுகிறது…
சமீபத்திய தேடல்கள் இல்லை
முடிவுகள் இல்லை க்கான "Query here"
மூலம் தேடுங்கள் FlexSearch
நீங்கள் தேடும் பக்கம் இல்லை அல்லது நகர்த்தப்பட்டது.
இவ்வாழ்க்கை முழு மகிழ்வுடனும், வரும் நித்திய வாழ்வையும் நன்றாகத் துய்க்க வேண்டும் என்று விரும்பாத ஆணோ, பெண்ணோ, சிறுவனோ சிறுமியோ எங்கணும் உண்டோ? பேதுரு அப்போஸ்தலர் தனது முதல் நிருபத்தில் மூன்றாம் அதிகாரம் பத்து முதல் பன்னிரண்டு வசனங்களில்”ஜீவனை விரும்பி(அல்லது துய்த்து) நல்ல நாட்களைக் காண வேண்டுமென்றிருக்கிறவன்,பொல்லாப்புக் குத்தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விளக்கிக்காத்து , பொல்லாப்பை விட்டு நீங்கி, நன்மை செய்து சமாதானத்தைத் தேடி அதைப் பின் தொடரக்கடவன். கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கிறது. அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது, தீமை செய்கிறவர்களுக்குகோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது” என்று எழுதுகிறார். தற்காலத்துக்கும் நித்தியத்துக்கும் வேண்டிய அடித்தளம் அமைக்கவும், மகிழ்ச்சிக்கும் வேண்டிய போதனைகள் இந்த சில சொற்களிலேயே இருக்கின்றன. சங்கீதம் 34:12-16 ல் உள்ள வசனங்களையே அப்போஸ்தலர் எடுத்தாள்வது இதை மேலும் வலியுறுத்துகின்றதுs.
இயேசுவானவர் ” மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் ; ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என தீர்க்கப்படுவாய் அல்லது குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய்” மத்தேயு 12:36-37 என்று சொன்னபோது, ஜனங்கள் தங்கள் கிரியைகளுக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு நினைப்பூacட்டினார். தங்கல் கிரியைகளுக்கு அவர்கள் விளக்கங்கூறி அவைகளுக்கு அவர்கள் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பது தான் அதின் கருத்து. கர்த்தர் எவ்விதமாக கணக்கு வைக்கிறார் என்பதை பரிசுத்த வேதாகமம் வெளிப்படுத்துகிறதில்லை. ஆனால் அது மிகவும் சரியான பதிவேடாகவும் மாற்றக் கூடாததாகவும் இருக்கும். “மரித்தோராகிய சிறியோரையும் பெரியாரையும் தேவனுக்கு முன் நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன. ஜீவ புஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது. அந்த புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள், தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்”.
இந்த வினாடியில் நீங்கள் உயிரோடிருக்கிறீர்கள் ;சுவாசித்து கொண்டிருக்கிறீர்; முறைப்படி உணவு அருந்திக் கொண்டிருக்கலாம்; அங்குமிங்கும் செல்லலாம், பணிபுரியலாம், உறங்கவும் செய்யலாம். சுகவாழ்வு வாழலாம் அல்லது ஏழ்மையில் ஊழலலாம். சூரியன் உதயமாகின்றது, அத்தமிக்கின்றது; ஓரிடத்தில் ஒரு மகவு பெறப்படுகின்றது. ஆன பிற நிகழ்ச்சிகளோடுங்ககூட எங்கோ ஒருவர் மரணம் அடைகின்றார். வாழ்க்கை முழுவதும் தற்காலிகச் செயல்கள் தாம். ஆனால் மரணத்திற்குப் பின் எங்கே செல்கின்றேன்? நான் பெயர்க் கிறிஸ்தவனாகவும் இருக்கலாம். அல்லது மகம்மதியனாக இருக்கலாம். அல்லது புத்த சமயத்தயமைந்தவராயிருக்கலாம். அல்லது யூதராயிருக்கலாம். அல்லது வேறு ஒரு மார்க்கத்தாராயிருக்கலாம். அல்லது எந்த சமயத்தையும் நம்பாதவராகவுமிருக்கலாம். ஆனால் நாம் இந்த சிறப்பான வினாவுக்கு விடை மொழியத்தான் வேண்டும், ஏனெனில் இக்குறை நேர உலக வாழ்வுக்குப்பின் மனிதன் அவனது நிறைவான நீண்ட நித்திய இல்லம் ஏகின்றான். ஆனால் எங்கே?