சர்வ சிருஷ்டிக்கும் மேலான உன்னதமான ஒரு ஜீவனையே நாம் கடவுள் என்று அழைக்கிறோம் என்பது தெளிவான உண்மை. அவரே காணப்படுகிறவைகளும், காணப்படாதவைகளும் ஆகிய சகலத்தையும் படைத்தவர். (கொலோ 1:16) எழுதப்பட்ட அவருடைய வார்த்தை அதைக் குறித்து பின்வருமாறு கூறுகிறது. வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது. ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. பகலுக்குப்பகல் வார்த்தைகளைப் பொழிகிறது. இரவுக்கு இரவு அறிவைத்தெரிவிக்கிறது. அவைகளுக்குப்பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசி வரைக்கும் செல்லுகிறது. அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார்.(சங்19:1-4) இந்த கடவுள் சிருஷ்டிக்கப்பட்டவரோ அல்லது மனிதனால் உண்டாக்கப்பட்டவரோ அல்ல. அவர் நித்தியவாசி. பர்வதங்கள் தோன்றும் முன்னும் நீர் பூமியையும், உலகத்தையும் உருவாக்கும் முன்னும் நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனா இருக்கிறீர்.(சங்.90:2) அவரே ஆதியும் அந்தமுமானவர்.(வெளி.1:8) இந்த உன்னதமான ஜீவனானவர் சர்வ வல்லமையுள்ள தேவன் கடவுள் சர்வ ஞானம் உடையவராய் இருக்கிறார் உண்மையான தேவனா விக்கிரகங்களா?
இயேசுவானவர் ” மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் ; ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என தீர்க்கப்படுவாய் அல்லது குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய்” மத்தேயு 12:36-37 என்று சொன்னபோது, ஜனங்கள் தங்கள் கிரியைகளுக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு நினைப்பூacட்டினார். தங்கல் கிரியைகளுக்கு அவர்கள் விளக்கங்கூறி அவைகளுக்கு அவர்கள் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பது தான் அதின் கருத்து. கர்த்தர் எவ்விதமாக கணக்கு வைக்கிறார் என்பதை பரிசுத்த வேதாகமம் வெளிப்படுத்துகிறதில்லை. ஆனால் அது மிகவும் சரியான பதிவேடாகவும் மாற்றக் கூடாததாகவும் இருக்கும். “மரித்தோராகிய சிறியோரையும் பெரியாரையும் தேவனுக்கு முன் நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன. ஜீவ புஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது. அந்த புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள், தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்”.
இவ்வுலகில் ஒருகாலத்தில் எதுவுமே இருந்ததில்லை மீன்கள் இல்லை வான் வெளியில் நட்சத்திரங்கள் இல்லை, கடல்களோ அழகிய மலர்களோ இல்லை, எல்லாம் வெட்ட வெளியாகவும் இருள்சூழ்ந்தும் இருந்தது, ஆனால் தேவன் இருந்தார் :நாம் இன்று ஜெபிக்கும் அதே தேவன்தான். தேவனுக்கு ஒரு மேம்பாடான திட்டம் இருந்தது. அவர் ஒரு அழகிய உலகத்தைப் பற்றிச்சிந்தித்தார், அவர் சிந்திக்கும் போது அவர் உண்டாக்கவும் செய்தார். அவர் எல்லாவற்றையும் ஒன்றுமில்லாமையிலிருந்து உண்டாக்கினார். தேவன் எதையும் உண்டாக்கும் போது, அவர் “அது உண்டாகக் கடவது” என்பார்.அது உண்டாகி இருக்கும்! அவர் வெளிச்சத்தை உண்டாக்கினார். அவர் ஆறுகளையும், கடல்களையும், புல் மூடிய பூமி, விலங்குகள் பறவைகள், மரங்களையும் உண்டாக்கினார். எல்லாவற்றிருக்கும் கடைசியாக அவர் மனிதனை உண்டாக்கினார், பிறகு அந்த மனிதனுக்கு ஒரு மனைவியையும் உண்டாக்கினார். அவர் அவர்களுக்குப் பெயர்களும் கூடக்கொடுத்தார்- ஆதாம், ஏவாள் அவர் அவர்களை மிகவும் நேசித்தார். அவர்கள் வசித்த அழகிய தோட்டத்தில் ஒவ்வொரு மாலையிலும் அவர்களைப் போய்ச்சந்தித்தார்.
நான் மீண்டும் பிறவாவிட்டால் மகிமையின் வாசல் நமக்கு அடைக்கப்பட்டிருக்கும் என்று இயேசு சொல்கிறார். எனவேதான் நாங்கள் வினவுகிறோம். நண்பரே, நீர் மீண்டும் பிறந்தீரா? இல்லையென்றால் நீர் இழந்துபோகப்பட்டவரே, ஏனெனில் இயேசுவே” ஒருவன் மறுபடியும் பிரவாவிட்டால் தேவனுடைய இராஜ்ஜியத்தைக் காணமாட்டேன்” என்றார். யோவா 3:3 உண்மையாகவே யாரும் பாவியாக இறந்து போகவோ, அழிந்து போகவோ விரும்பமாட்டான். எனவே நீர் மறுபடியும் பிறக்க வேண்டும். ஆனால் நான் எப்பொழுது மறுபடியும் பிறக்க எதிர்பார்க்கலாம்? பரிசுத்த ஆவியின் மூலம் தேவன் சொல்கிறார்;” இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்கள்” என்று(எபி 3:7) எந்த வயதிலும், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் அழைப்பு வருவதை நாம் கேட்போம் என்பதே அதன் பொருள். தேவனுடைய பிள்ளைகளும், தேவனுடைய சுதந்தரருமாக கிறிஸ்துவுடனே உடன் சுதந்தரரும் ஆக நாம் வந்து, ஆவியின் மூலம் மறுபடியும் பிறப்போமாக. ரோமா (8:14-17).
இந்த வினாடியில் நீங்கள் உயிரோடிருக்கிறீர்கள் ;சுவாசித்து கொண்டிருக்கிறீர்; முறைப்படி உணவு அருந்திக் கொண்டிருக்கலாம்; அங்குமிங்கும் செல்லலாம், பணிபுரியலாம், உறங்கவும் செய்யலாம். சுகவாழ்வு வாழலாம் அல்லது ஏழ்மையில் ஊழலலாம். சூரியன் உதயமாகின்றது, அத்தமிக்கின்றது; ஓரிடத்தில் ஒரு மகவு பெறப்படுகின்றது. ஆன பிற நிகழ்ச்சிகளோடுங்ககூட எங்கோ ஒருவர் மரணம் அடைகின்றார். வாழ்க்கை முழுவதும் தற்காலிகச் செயல்கள் தாம். ஆனால் மரணத்திற்குப் பின் எங்கே செல்கின்றேன்? நான் பெயர்க் கிறிஸ்தவனாகவும் இருக்கலாம். அல்லது மகம்மதியனாக இருக்கலாம். அல்லது புத்த சமயத்தயமைந்தவராயிருக்கலாம். அல்லது யூதராயிருக்கலாம். அல்லது வேறு ஒரு மார்க்கத்தாராயிருக்கலாம். அல்லது எந்த சமயத்தையும் நம்பாதவராகவுமிருக்கலாம். ஆனால் நாம் இந்த சிறப்பான வினாவுக்கு விடை மொழியத்தான் வேண்டும், ஏனெனில் இக்குறை நேர உலக வாழ்வுக்குப்பின் மனிதன் அவனது நிறைவான நீண்ட நித்திய இல்லம் ஏகின்றான். ஆனால் எங்கே? உமது ஆத்துமா ஒரு போதும் இறப்பதில்லை! வானத்தையும், பூமியையும் படைத்த கடவுள் சொன்னார் “எல்லா ஆத்துமாவும் என்னுடையது “என்று.
இவ்வாழ்க்கை முழு மகிழ்வுடனும், வரும் நித்திய வாழ்வையும் நன்றாகத் துய்க்க வேண்டும் என்று விரும்பாத ஆணோ, பெண்ணோ, சிறுவனோ சிறுமியோ எங்கணும் உண்டோ? பேதுரு அப்போஸ்தலர் தனது முதல் நிருபத்தில் மூன்றாம் அதிகாரம் பத்து முதல் பன்னிரண்டு வசனங்களில்”ஜீவனை விரும்பி(அல்லது துய்த்து) நல்ல நாட்களைக் காண வேண்டுமென்றிருக்கிறவன்,பொல்லாப்புக் குத்தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விளக்கிக்காத்து , பொல்லாப்பை விட்டு நீங்கி, நன்மை செய்து சமாதானத்தைத் தேடி அதைப் பின் தொடரக்கடவன். கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கிறது. அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது, தீமை செய்கிறவர்களுக்குகோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது” என்று எழுதுகிறார். தற்காலத்துக்கும் நித்தியத்துக்கும் வேண்டிய அடித்தளம் அமைக்கவும், மகிழ்ச்சிக்கும் வேண்டிய போதனைகள் இந்த சில சொற்களிலேயே இருக்கின்றன. சங்கீதம் 34:12-16 ல் உள்ள வசனங்களையே அப்போஸ்தலர் எடுத்தாள்வது இதை மேலும் வலியுறுத்துகின்றதுs.